கமலின் விக்ரம் பட கதை இதுதானாம்.. வெளிவந்த பிஸ்னஸ் ரிப்போர்ட்

கமல் ரசிகர்கள் ரொம்ப காலமாகவே கமலை திரையில் காண பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். விஸ்வரூபம் 2 படத்திற்குப் பின் கமல் சிறிது காலம் அரசியலில் பிசியாகிவிட்டார்.

இப்பொழுது அரசியலை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். அந்த படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீசாகிறது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமைகளை ஹாட்ஸ்டார் தான் வாங்கி இருக்கிறார்களாம். அவர்கள் இந்த படத்திற்காக 112 கோடிகள் வரை கமலிடம் பேசி வருகிறார்களாம்.

இந்நிலையில் விக்ரம் படத்தில் கமல் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் என்றும். அவர் பணிபுரியும் பொழுது அவரின் பழைய திறமைகளைப் பார்த்து அசைன்மென்ட் ஒதுக்கி கொடுப்பது போல கதை நகருமாம் .

படத்தில் கமல் அறிமுகக் காட்சியிலேயே அசத்துவது போல் எடுத்துள்ளாராம் லோகேஷ் கனகராஜ். தற்போது அதன் மேக்கிங் வீடியோ வெளியாகி சக்கை போடு போட்டது.

கமல் வயதான தோற்றத்தை மாற்றாமல் அப்படியே பல காட்சிகளில் நடித்து அசத்தியிருக்கிறார்.ஏற்கனவே போதை பொருள் கதையை லோகேஷ் கனகராஜ் கைதி படத்தில் பயன்படுத்தியதால் இதில் பல வித்தியாசங்களை காட்டியுள்ளார் .

கொடூரமான கேங்க்ஸ்டர் கூட்டத்தை தன் என்கவுண்டர் பாணியில் கமல் போட்டுத் தள்ளுகிறாராம்.  இதுதான் இந்த படத்தின் ஒற்றை வரி செய்தி என்று கமல் ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →