தேசிய விருது வாங்கிய நடிகைக்கு வந்த வாய்ப்பு.. புஷ்பா-2க்கு கிடைத்த புது வில்லி

அல்லு அர்ஜுன் நடித்து வெளிவந்த படம் புஷ்பா. தமிழில் அதிரி புதிரி ஹிட் ஆன இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தற்போது எடுக்க திட்டமிட்டு வருகின்றனர். அதற்கேற்ற கதாபாத்திரத்தையும் தேர்வு செய்து வருகின்றனர். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஏற்றவாறு முக்கிய நடிகர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

முதல் பாகத்தில், படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அத்தனை கதாபாத்திரங்களும் அமைந்துள்ளது. இப்பொழுது இரண்டாம் பாகத்திற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தேர்வு செய்வதில் ஒரு போராட்டமே நடக்கிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய்சேதுபதி நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த விஷயம். ஆனால் இப்பொழுது தேசிய விருது வாங்கிய நடிகை ஒருவரும் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தமிழ் சினிமாவில் யாராலும் மறக்க முடியாத படம் பருத்திவீரன். இந்த படத்தில் நடித்தவர் பிரியா மணி. கிராமத்து பெண்ணாக அவ்வளவு எதார்த்தமாக, தைரியமாக நடித்திருப்பார். இப்பொழுது புஷ்பா 2 படத்தில் அவர் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

பிரியாமணி படத்தில் நடிப்பது பற்றி அதிகாரபூர்வமான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரும். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக பிரியாமணி நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் இருந்த நிலையில், பிரியாமணி இதில் நடிக்கவிருப்பது அவர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை தந்துள்ளது. விஜய் சேதுபதி, பிரியாமணி என நடிப்பில் மிரட்ட கூடியவர்கள் இருப்பதால் இதற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →