ஓடிடி, சேட்டிலைட் வியாபாரமாகாமல் தவிக்கும் 4 பெரிய படங்கள்.. 3 ஹீரோக்களை நம்பி குழியில் விழுந்த நெட்பிளிக்ஸ்

பெரிய ஹீரோக்கள், நம்பகத்தகுந்த இயக்குனர்கள் படங்கள்  என்றால் அதை வாங்குவதற்கு  ஓ டி டி தளங்கள் போட்டி போட்ட காலங்களும் உண்டு. இப்பொழுது படத்தின் பட்ஜெட், ஹீரோக்களின் சம்பளம் என படத்தை ஒரு பெரும் தொகைக்கு விற்க முயற்சிக்கிறார்கள். ஆனால் அதை வாங்குபவர்களுக்கு லாபம் கிடைக்கிறதா என்பது பெரிய கேள்விக்குறியாக தான் இருக்கிறது.

சமீபத்தில் மூன்று  பெரிய ஹீரோக்களை நம்பி அவர்களது படத்தை  நல்ல ஒரு  கணிசமான தொகையை கொடுத்து வாங்கியது நெட்பிளிக்ஸ். ஆனால் அது அவர்களுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுத்தது. அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து இன்று வரை அவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை தொடர்ந்து  ஏற்படுத்தி வருகிறதாம்.

விடாமுயற்சி,  தக்லைப், ரெட்ரோ இந்த மூன்று படங்களையும் நம்பி நெட்பிளிக்ஸ் தங்களது கல்லாவை கரைத்தார்கள், அஜித், கமல், சூர்யா படங்களே அவர்களை அதல பாதாளத்தில் தள்ளிவிட்டுள்ளது. தொடர்ந்து நஷ்டம் அடைந்ததால் இப்பொழுது தெளிவான முடிவுக்கு வந்துவிட்டனர். முழு  படத்தையும் பார்த்த பின்பு தான் விலை பேசுவோம் என போர்க்கடி பிடித்து வருகிறார்கள்.

 இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ள சூர்யாவின் கருப்பு, கார்த்தியின் சர்தார் 2, ஜெயம் ரவியின் சீனி, சித்தார்த் நடித்து அடுத்த வாரம் ரிலீஸ் தேதி அறிவித்த 3BHK போன்ற படங்கள் இன்னும் வியாபாரமாகவில்லையாம். இந்த படங்களை நெட்பிளிக்ஸ்சும் வாங்க முன் வரவில்லையாம்.

இதனால் இந்த படங்கள் அனைத்தும்  ஓடிடி மற்றும் டிஜிட்டல்  விற்றால்தான் ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள். இதில் 3 BHK ஜூலை முதல் வாரத்தில் ரிலீஸ் என்று அறிவித்தும் கூட  நெட்பிளிக்ஸ் அதை  வாங்குவதற்கு  தயக்கம் காட்டி வருகிறது.அதைப்போல் ஆர் ஜே  பாலாஜி, சூர்யாவை வைத்து இயக்கி வரும் கருப்பு படத்தையும்  ஆரம்பத்தில் நெட்பிளிக்ஸ் தான் வாங்குவதாக இருந்தது.. 

shankar-ganesh

Shankar

சங்கர் கணேஷ் – கடந்த 8 ஆண்டுகளாக சினிமா தொடர்பான உள்ளடக்கங்களை எழுதி வருகிறார். தமிழ் சினிமா செய்திகள், OTT செய்திகள், இசை மற்றும் விமர்சனங்களில் ஆர்வம் கொண்டவர். உண்மையான மற்றும் பயனுள்ள தகவல்களை கொண்டு சேர்ப்பதே இவரின் குறிக்கோள்.

View all posts →